ரோட்டில் படுத்திருந்த 2 நாகப்பாம்புகளால் பரபரப்பு


ரோட்டில் படுத்திருந்த 2 நாகப்பாம்புகளால் பரபரப்பு
x

வாணியம்பாடியில் ரோட்டில் படுத்திருந்த 2 நாகப்பாம்புகளால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி நியூடவுன் மாரியம்மன் கோவில் தெருவில் பள்ளி சிறுவர்கள் டியூஷனுக்கு சென்றுள்ளனர். டியூஷன் படித்து விட்டு வீடு திரும்பிய போது வழியில் ரோட்டின் குறுக்கே 2 நாகப்பாம்புகள் படுத்திருந்தது. இதைப்பார்த்த அவர்கள் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்தனர்.

உடனடியாக அப்பகுதி மக்கள் பாம்பு பிடிக்கும் நபருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் விரைந்து வந்த பாம்பு பிடிக்கும் இளைஞர் இலியாஸ் 2 நாகப்பாம்புகளையும் லாவகமாக பிடித்து சென்று மலைப்பகுதியில் விட்டார்.


Next Story