மலைப்பகுதியில் மாடு மேய்த்த 2 பேர் பிடிபட்டனர்


மலைப்பகுதியில் மாடு மேய்த்த 2 பேர் பிடிபட்டனர்
x

நீதிமன்ற உத்தரவை மீறி மலைப்பகுதியில் மாடு மேய்த்த 2 பேர் பிடிபட்டனர்.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு பகுதியானது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. மலை அடிவார கிராமப்பகுதிகளில் நாட்டு இன மலை மாடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நாட்டு இன மலை மாடுகளை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தான் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வர்கள். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலிகள் சரணாலயம் அமைந்துள்ளதால் மேய்ச்சலுக்கு இந்த நாட்டு இன மலை மாடுகளை வனப்பகுதிக்கு அழைத்து செல்லக்கூடாது கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இந்தநிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி வத்திராயிருப்பு அருகே உள்ள பிளவக்கல் மலைப்பகுதியில் மலை மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்ற குமரன், அயூப்கான் ஆகிய 2 பேரை வனத்துறையினர் பிடித்து வனத்துறை அலுவலகத்தில் வைத்திருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாட்டின் உரிமையாளர்கள் அவர்களை விடுவிக்க கோரி எஸ்.கொடிக்குளம் வனத்துறை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மலை மாடுகளை நம்பியே தங்களது வாழ்வாதாரம் இருப்பதாகவும், மலைப்பகுதியில் மலை மாடுகளை மேய்க்க அனுமதிக்க வேண்டும், கைது செய்யப்பட்டவர்களை எந்தவித வழக்கும் இன்றி உடனே விடுவிக்க வேண்டுமென கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



Next Story