மின்சாரம் தாக்கி 2 பசுமாடுகள் சாவு
அரக்கோணம் அருகே மின்சாரம் தாக்கி 2 பசுமாடுகள் இறந்தன.
ராணிப்பேட்டை
அரக்கோணத்தை அடுத்த அரிகிலபாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாயியான இவரது இரண்டு பசு மாடுகள் அந்த பகுதியில் உள்ள ஏரிக்கரையின் ஓரமாக மேய்ந்து கொண்டிருந்தது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பிகள் மூலம் மின்சாரம் தாக்கி இரண்டு பசு மாடுகளும் பரிதாபமாக இறந்தன. இது குறித்து மின்சாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் கூறுகையில் முறையாக பராமரிப்பு செயாததன் காரணமாகவே இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது என்றனர். இச்சம்பவம் குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story