மின்னல் தாக்கி 2 மாடுகள் செத்தன


மின்னல் தாக்கி 2 மாடுகள் செத்தன
x

கந்தம்பாளையம் அருகே மின்னல் தாக்கியதில் 2 மாடுகள் செத்தன.

நாமக்கல்

கந்தம்பாளையம்

சினை மாடுகள்

கந்தம்பாளையம் அருகே உள்ள கோலாரம் கரிச்சிப்பாளையம் பறைய காட்டை சேர்ந்தவர் கருப்பண்ணன் (வயது 68). இவர் விவசாயம் செய்து குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவரது தோட்டத்தில் 2 மாடுகளை வளர்த்து வந்தார். இந்தநிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் பொதுமக்களை சுட்டெரித்து வந்தது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் கரிச்சிப்பாளையம் பகுதியில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. மேலும் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழையாக நீடித்தது. அப்போது கருப்பண்ணன் அவரது வீட்டின் அருகே உள்ள மரத்தில் இரண்டு மாடுகளை கட்டி வைத்திருந்தார்.

மின்னல் தாக்கியது

அப்போது திடீரென் அந்த 2 மாடுகளை மின்னல் தாக்கியது. இதில் 2 மாடுகளும் கீழே விழுந்தன. இதைத்தொடர்ந்து சத்தம் கேட்டு கருப்பண்ணன் ஓடி வந்து பார்த்தார். அப்போது மின்னல் தாக்கி 2 மாடுகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதன் மதிப்பு ரூ.1½ லட்சம் இருக்கும் என அவர் தெரிவித்தார்.

மின்னல் தாக்கி 2 சினை மாடுகள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story