மின்னல் தாக்கி 2 பசு மாடுகள் சாவு
வேப்பந்தட்டை அருகே மின்னல் தாக்கி 2 பசு மாடுகள் செத்தன.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் ஊராட்சி ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்தவர் செபஸ்தியார் (வயது 50), விவசாயி. இவர் தனது வீட்டின் அருகே பட்டி அமைத்து 2 பசு மாடுகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அந்தப்பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது செபஸ்தியார் வளர்த்து வந்த 2 மாடுகளும் மின்னல் தாக்கி பரிதாபமாக இறந்தன. இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire