ரூ.2 கோடியில் புதிய கட்டிடம்


ரூ.2 கோடியில் புதிய கட்டிடம்
x

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.2 கோடியில் புதிய கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

விருதுநகர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் தீயணைப்பு தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு மேலாண்மை துறை பிரிவுக்கான புதிய பணிமனை மற்றும் வகுப்பறை கட்டிடங்கள் ரூ.2 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் நவீனவசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை நேற்று முதல்-அமைச்சர். மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். புதிய கட்டிடத்தில் கலெக்டர் மேகநாத ரெட்டி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ரவிக்குமார், மண்டல பயிற்சி இயக்குனர் செல்வகுமார், பொதுப்பணித்துறை நிர்வாக என்ஜினீயர் செல்வராஜ், பயிற்சி நிலைய முதல்வர் ராதாகிருஷ்ணன், சூலக்கரை பஞ்சாயத்து தலைவி புஷ்பம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நடப்பு கல்வி ஆண்டில் பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்ட தொழில் பிரிவு பயிற்சியாளர்களுக்கு சேர்க்கை ஆணைகளை கலெக்டர் வழங்கினார். அப்போது தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.



Next Story