ஒரே நாளில் ரூ.2¼ கோடிக்கு தானியங்கள் விற்பனை


ஒரே நாளில் ரூ.2¼ கோடிக்கு தானியங்கள் விற்பனை
x
தினத்தந்தி 23 Jan 2023 6:45 PM GMT (Updated: 24 Jan 2023 8:54 AM GMT)

அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் ரூ.2¼ கோடிக்கு தானியங்கள் விற்பனை 5 ஆயிரம் நெல் மூட்டைகள் வரத்து

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூரில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு நேற்று ஒரே நாளில் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் வரத்து வந்தன. இதன் அதிகபட்ச விலையாக ஒரு மூட்டைக்கு ரூ.1,800 ஆகவும், குறைந்தபட்சம் ரூ.1,155 ஆகவும் இருந்தது. மணிலா ஒரு மூட்டைக்கு அதிகபட்ச விலை ரூ.8,508 ஆகவும், குறைந்தபட்சம் ரூ.7,709 ஆகவும் இருந்தது.

அதேபோல் எள் ஒரு மூட்டை அதிகபட்ச விலை ரூ.12 ஆயிரத்து 350 ஆகவும், குறைந்தபட்சம் ரூ.6,009 ஆகவும், உளுந்து ஒரு மூட்டை அதிகபட்சமாக ரூ.6,976 ஆகவும் குறைந்தபட்சம் ரூ.5,200 ஆகவும், பச்சை பயிர் ஒரு மூட்டை அதிகபட்சமாக ரூ.7,510 ஆகவும், குறைந்தபட்சம் ரூ.5,689 ஆகவும், நாட்டுக்கம்பு ஒரு மூட்டை அதிகபட்சம் ரூ.6,969 ஆகவும் குறைந்தபட்சம் ரூ.6,849 ஆகவும், உயர்ரக கம்பு ஒரு மூட்டை ரூ.2,509 ஆகவும் குறைந்தபட்சம் ரூ.2,258 ஆகவும், கேழ்வரகு ஒரு மூட்டை அதிகபட்சம் ரூ.2,389 ஆகவும், குறைந்தபட்சம் ரூ.2,386 ஆகவும் இருந்தது.

மக்காச்சோளம் ஒரு மூட்டை அதிகபட்சமாக ரூ.2,266 ஆகவும், குறைந்தபட்சம் ரூ.1,973 ஆகவும், தட்டைப்பயிர் ஒரு மூட்டை அதிகபட்சம் ரூ.6,009 ஆகவும், குறைந்தபட்சம் ரூ.4,669 ஆகவும், திணை ஒரு மூட்டை அதிகபட்சம் ரூ.3,389 ஆகவும் குறைந்தபட்சம் ரூ.3,369 ஆகவும், தேங்காய் ஒரு மூட்டை அதிகபட்சம் ரூ.5,589 ஆகவும் குறைந்தபட்சம் ரூ.4,229 ஆகவும், துவரை ஒரு மூட்டை ரூ.4,445 ஆகவும், சாமை ஒரு மூட்டை ரூ.2,689 ஆகவும் விலை இருந்தது. அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.2 கோடியே 34 லட்சத்துக்கு தானியங்கள் விற்பனை நடைபெற்றது.


Next Story