பேரிஜம் ஏரிக்கு செல்ல 2 நாட்கள் தடை
பேரிஜம் ஏரிக்கு செல்ல 2 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்
கொடைக்கானல் மலைப்பகுதியில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. அதில், இயற்கை எழில்சூழ அமைந்துள்ள பேரிஜம் ஏரியும் ஒன்று. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இந்த ஏரி அமைந்துள்ளதால் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் பேரிஜம் ஏரிக்கு செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள், வனத்துறை அனுமதி பெற்று மட்டுமே செல்ல முடியும். அதன்படி, இந்த ஏரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்தநிலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர். அந்த குழுவினர் நாளை மறுநாள் (புதன்கிழமை) பேரிஜம் ஏரிக்கு சென்று மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர். இதையொட்டி நாளையும், நாளை மறுநாளும் என 2 நாட்கள் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
Related Tags :
Next Story