மதுரையில் 2 நாட்கள் வாகன போக்குவரத்து மாற்றம்
பிரதமர் மோடி வருகையையொட்டி, மதுரையில் வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வருகையையொட்டி, மதுரையில் வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் வருகை
திண்டுக்கல் காந்திகிராம, பல்கலைக்கழத்தில் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மேலும் இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த விழாவில் பிரதமர், மதுரையில் இருந்து திண்டுக்கல்லிற்கு சாலை மார்க்கமாக செல்ல இருப்பதால், அது தொடர்பான பாதுகாப்பு முன்னோட்டம் நிகழ்வு இன்று நடைபெற இருக்கின்றது. எனவே இன்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், மற்றும் நாளை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், பிற மாவட்டங்களில் இருந்து மதுரை, திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்று பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மதுரை மாநகரில் இருந்து திண்டுக்கல் செல்வதற்கு மதுரையில் இருந்து அலங்காநல்லூர், பாலமேடு, ராஜாக்கால்பட்டி, முளையூர், நரசிங்கபுரம் வழியாக திண்டுக்கல் செல்லவேண்டும். அல்லது, மதுரையில் இருந்து பாத்திமா கல்லூரி வழியாக அலங்காநல்லூர் கேட்டுக்கடை, எம்.சத்திரப்பட்டி, நத்தம், வழியாக திண்டுக்கல் செல்லவேண்டும்.
மதுரை மாநகரில் இருந்து தேனி செல்வதற்கு பாத்திமா கல்லூரி வழியாக பரவை, சமயநல்லூர் (நான்கு வழிச்சாலை பாலத்தின் கீழ்), தேனூர் ரோடு மேலக்கால், செக்கானூரணி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி வழியாக தேனி செல்லவேண்டும்.
ராஜபாளையத்தில் இருந்து திண்டுக்கல் செல்வதற்கு தே.கல்லுப்பட்டி சந்திப்பில் இருந்து பேரையூர், சேடப்பட்டி, உசிலம்பட்டி, வத்தலக்குண்டு, செம்பட்டி வழியாக திண்டுக்கல் செல்ல வேண்டும்.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் இருந்து மதுரை மாநகருக்கு செல்வதற்கு கள்ளிக்குடி சந்திப்பில் இருந்து காரியாபட்டி, ஆவியூர், பாரப்பத்தி, எலியார்பத்தி டோல்கேட், வலையங்குளம் சந்திப்பு, சோளாங்குருணி சந்திப்பு, விராதனூர், சிந்தாமணி டோல் கேட் வழியாக மதுரை மாநகருக்குள் செல்ல வேண்டும். திருச்சியில் இருந்து நெல்லை மாவட்டத்திற்கு செல்வதற்கு ராமநாதபுரம் ரிங்ரோடு சந்திப்பில் இருந்து திருப்புவனம், அல்லிநகரம் சந்திப்பு, புல்வாய்கரை சந்திப்பு, தொட்டியங்குளம் சந்திப்பு, திம்மாபுரம், முஸ்டக்குறிச்சி, மீனாட்சிபுரம், காரியாபட்டி வழியாக நெல்லை செல்ல வேண்டும்.
நெல்லையில் இருந்து திருச்சி செல்லும் வாகனங்கள் கள்ளிக்குடி சந்திப்பில் இருந்து காரியாபட்டி, எலியார்பத்தி டோல்கேட், வலையங்குளம் சந்திப்பு, சிந்தாமணி மற்றும் மதுரை மாநகர் பகுதியில் உள்ள டோல் கேட் வழியாக செல்லவேண்டும். விருதுநகரில் இருந்து திருச்சி செல்லும் வாகனங்கள் கள்ளிக்குடி சந்திப்பில் இருந்து காரியாபட்டி, எலியார்பத்தி டோல்கேட், வலையங்குளம் சந்திப்பு, சிந்தாமணி மற்றும் மதுரை நகர் பகுதியில் உள்ள டோல் கேட் வழியாக செல்லவேண்டும். நெல்லை மற்றும் விருதுநகரில் இருந்து திண்டுக்கல் மற்றும் பழனி செல்லும் வாகனங்கள் கள்ளிக்குடி சந்திப்பில் தே.கல்லுப்பட்டி, பேரையூர் சந்திப்பு, உசிலம்பட்டி சந்திப்பு, உசிலம்பட்டி, வத்தலக்குண்டு வழியாக திண்டுக்கல் செல்ல வேண்டும். அல்லது, கள்ளிக்குடி, சிவரக்கோட்டை, உசிலம்பட்டி சந்திப்பு, உசிலம்பட்டி, வத்தலக்குண்டு வழியாக திண்டுக்கல் செல்ல வேண்டும்.
மதுரை நகர் பகுதியில் இருந்து திண்டுக்கல், வத்தலக்குண்டு, பெரியகுளம், கொடைக்கானல் மற்றும் கோவை செல்லும் வாகனங்கள் மதுரையில் இருந்து பாத்திமா கல்லூரி வழியாக பரவை, சமயநல்லூர், தேனூர், சோழவந்தான், கரப்பட்டி, பள்ளப்பட்டி, நிலக்கோட்டை மற்றும் செம்பட்டி வழியாக செல்ல வேண்டும்.
விருதுநகர், நெல்லை, செங்கோட்டையில் இருந்து திண்டுக்கல் மற்றும் தேனி செல்லும் வாகனங்கள் திருமங்கலம், உசிலம்பட்டி ரோடு சந்திப்பில் இருந்து சிந்துப்பட்டி, தி.விலக்கு, உசிலம்பட்டி வழியாக செல்லவேண்டும்.
காவல்துறை அறிவித்துள்ள வழித்தடம் வழியாக செல்லவேண்டும் எனவும், எக்காரணம் கொண்டும் மதுரை மாநகருக்குள் செல்லக்கூடாது
டிரோன், வாணவேடிக்கைக்கு தடை
பிரதமர் மோடி வருகையையொட்டி மதுரை விமான நிலையம் பாதுகாப்பு மண்டலமாக உள்ளதால் மேற்படி பகுதியில் டிரோன் கேமராக்கள் பறக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. விமான நிலையத்தைச் சுற்றி உள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் வாணவேடிக்கை வெடிக்க வேண்டாம் எனவும், புகைகள் வருமாறு எதையும் எரிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த தகவலை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.