2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
நாகை மாவட்டத்தில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாகப்பட்டினம்
வெளிப்பாளையம்:
நாகை மாவட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்புக் கோட்ட நிர்வாக பொறியாளர் கருணாகரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் அருகே கூட்டுக்குடிநீர் திட்டத்தின் பிரதான நீரேற்றும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.இந்த குழாய் உடைப்பு சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால் வருகிற 13-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) மற்றும் 14-ந்தேதி(புதன்கிழமை) ஆகிய 2 நாட்கள் கீழ்வேளூர், கீழையூர், தலைஞாயிறு, நாகை, திருமருகல், வேளாங்கண்ணி மற்றும் கீழ்வேளூர் பேரூராட்சி ஆகிய பகுதிகளிலும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story