டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாள் விடுமுறை


டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாள் விடுமுறை
x

திருவள்ளுவர், குடியரசு தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள மதுபான பார்கள் வருகிற 16-ந் தேதி திருவள்ளுவர் தினம், 26-ந் தேதி குடியரசு தினம் ஆகிய 2 நாட்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினங்களில் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. அதையும் மீறி விற்பனை செய்வது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுபான பார்கள் திறக்கப்பட்டு இருந்தாலும், பாரில் மதுபானம் விற்பனை செய்வது தெரிய வந்தாலும் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், ரத்து செய்தல் மற்றும் மதுக்கூட உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த தகவலை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.


Next Story