கீழடி அருங்காட்சியகத்திற்கு 2 நாட்கள் விடுமுறை


கீழடி அருங்காட்சியகத்திற்கு 2 நாட்கள் விடுமுறை
x

கீழடி அருங்காட்சியகத்தில் பழங்கால பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

சென்னை,

தமிழர்களின் நாகரிகத்தை உலகிற்கு பறைசாற்றும் விதமாக, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பழங்கால பொருட்கள் கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த அருங்காட்சியகத்தை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 5-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கீழடி அருங்காட்சியகத்தில் 6 தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தளங்களிலும் கீழ் பகுதி, மேல் பகுதி என அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ள 2,600 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள பழங்கால பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண முறை அமல்படுத்தப்பட்டது. தினசரி பார்வையாளர்கள், சுற்றுலா பயணிகள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள், வெளி மாநிலத்தினர் என ஏராளமானோர் வந்து கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில், கீழடி அருங்காட்சியகத்திற்கு நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை வழக்கமான வார விடுமுறை மற்றும் நாளை மறுதினம் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துள்ள விடுமுறையால் தொடர்ந்து 2 நாட்களுக்கு அருங்காட்சியகம் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story