2 நாட்கள் மின்சாரம் நிறுத்தம்


2 நாட்கள் மின்சாரம் நிறுத்தம்
x

காவனூர் உள்ளிட்ட பகுதிகளில் 2 நாட்கள் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ராணிப்பேட்டை

ஆற்காடு துணைமின் நிலையம், கத்தியவாடி துணை மின்நிலையம், ஆனைமல்லூர் துணை மின்நிலையம் ஆகியவற்றில் பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகள் 2 நாட்கள் நடக்கிறது. எனவே வருகிற 13-ந் தேதி அன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை கத்தியவாடி, விஷாரம் பிரிவுக்கு உட்பட்ட டேனரிரோடு, ஆஜிபேட்டை, ஹன்சநகர், பாகர்தெரு, புதுப்பேட்டை, புளியமரம் நிறுத்தம், புளிமாதா தெரு, மீராசாகிப்தெரு, சவுக்கார் தெரு, முத்துஜார்தெரு மற்றும் ஆற்காடு கிழக்கு பிரிவுக்கு உட்பட்ட முப்பது வெட்டி கிளைவ் பஜார் பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதேபோல 14-ந் தேதி காலை 8 மணி முதல் 11 மணி வரை காவனூர் பிரிவுக்கு உட்பட்ட புங்கனூர், காவனூர், வெள்ளைகுளம், எல்லாசிகுடிசை குப்பம், கண்ணடிபாளையம் மற்றும் ஆற்காடு கிழக்கு பிரிவுக்கு உட்பட்ட உப்புப்பேட்டை, கூரம்பாடி, கிருஷ்ணவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவலை செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.


Next Story