மழைநீர் வடிகால் அமைக்கும் பணி பரங்கிமலையில் இன்று முதல் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம்


மழைநீர் வடிகால் அமைக்கும் பணி பரங்கிமலையில் இன்று முதல் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
x

சென்னை பெருநகர போக்குவரத்து போலீஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை

சென்னை பெருநகர போக்குவரத்து போலீஸ் தெற்கு மாவட்ட போலீஸ் சார்பில் பரங்கிமலை போக்குவரத்து போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஜி.எஸ்.டி. சாலையில் ஓட்டல் ஹப்லிஸ் அருகே பரங்கிமலை நோக்கி வெளிச்செல்லும் சாலையில் நெடுஞ்சாலை துறையினரால் நிரந்தர மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற இருப்பதால் இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி அண்ணா சாலையில் இருந்து பரங்கிமலை நோக்கி வெளி செல்லும் வணிக மற்றும் கனரக வாகனங்கள் கிண்டி மேம்பாலத்தில் இருந்து (கிண்டி போகும் வழி செல்லாமல்) இடதுபுறமாக உள்ள ரேஸ்கோர்ஸ் சாலையில் திருப்பிவிடப்படும். ரேஸ்கோர்ஸ் சாலை வழியாக சென்று மடுவன்கரை மேம்பாலம் அருகே உள்ள சர்வீஸ் சாலை வழியாக சிட்டி லிங்க் சாலை சென்று ஆதம்பாக்கம் பஸ் பணிமனை, மவுண்ட் ரெயில் நிலையம் சென்று மேடவாக்கம் மெயின் ரோடில் வலது புறமாக திரும்பி எம்.ஆர்.டி.எஸ். சாலை- தில்லைகங்கா நகர் சுரங்கப்பாதை சிமெண்ட் ரோடு சந்திப்பு வந்து ஜி.எஸ்.டி. சாலையை சென்றடையலாம். அனைத்து அவசரகால வாகனங்கள், ஆம்புலன்ஸ், இலகுரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் எவ்வித தடையும் இல்லாமல் வழக்கம்போல் செல்லும் சாலையில் செல்லலாம். எனவே அனைத்து வாகன ஓட்டிகளும் மாற்றுப்பாதையில் சென்று பாதுகாப்பாக பயணிக்க போக்குவரத்து காவல்துறைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story