வாகனம் மோதி 2 மான்கள் பலி
வாகனம் மோதி 2 மான்கள் உயிரிழந்தது.
சிவகங்கை
மானாமதுரை,
மானாமதுரை அருகே பல கிராமங்களில் காட்டு பகுதிகளில் புள்ளி மான்கள் வசித்து வருகின்றன. இவை இரை மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது நகர் பகுதியில் உள்ள சாலை பகுதிகளை கடப்பது வழக்கம். இந்நிலையில் மானாமதுரை அருகே எம்.கரிசல்குளம் என்ற இடத்தில் மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச்சாலையில் 2 புள்ளி மான்கள் மீது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்து கிடந்தன.
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்து கிடந்த 2 மான்களின் உடலை கைப்பற்றி அங்கேயே பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர். இரை தேடி வந்தபோது இந்த மான்கள் வாகனத்தில் சிக்கி இறந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story