காற்றுடன் பெய்த மழையில் மரம் விழுந்து 2 டிரைவர்கள் படுகாயம்
ஆரணியில் காற்றுடன் பெய்த மழையில் மரம் முறிந்து விழுந்ததில் 2 கார் டிரைவர்கள் காயம் அடைந்தனர். 10 பேர் உயிர்தப்பினர்.
ஆரணி
ஆரணியில் காற்றுடன் பெய்த மழையில் மரம் முறிந்து விழுந்ததில் 2 கார் டிரைவர்கள் காயம் அடைந்தனர். 10 பேர் உயிர்தப்பினர்.
ஆரணி நகரில் நேற்று காலை முதல் மாலை 4 மணி வரை வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் திடீரென மாலை 4.30 மணி அளவில் பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது.
அப்போது கோட்டை மைதானம் அருகே மரத்தடியில் கார், வேன் டிரைவர்கள் ஒன்றாக அமர்ந்திருந்தனர். அப்போது காய்ந்து இருந்த ஒரு மரக்கிளை முறிந்து விழுந்தது.
இதில் ஆரணி வி.டி.எஸ்.தெருவை சேர்ந்த வேன் டிரைவர் சரவணன் (வயது 45) என்பவர் தலையில் மரம் விழுந்தது அருகில் இருந்த பழனி (55) இவருக்கு தோள்பட்டையில் மரம் விழுந்து காயம் ஏற்பட்டது. மற்றவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியறியதால் அவர்கள் உயிர்தப்பினர்.
பின்னர் காயம் அடைந்த சரவணன், பழனி ஆகியோரை அங்கிருந்த வாகனத்தில் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர்கள் சேர்த்தனர் இதில் சரவணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
தொடர்ந்து ஒரு அரை மணி நேரம் கன மழை பெய்து வந்தது. இதன் காரணமாக மழை நீர், சாலைகளில் வெள்ளம் போல் ஓடியது. கால்வாயில் அடைப்பு இருந்ததால் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் ஓடியது. இரவில் குளிர்ந்த காற்று வீசியது.