கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற 2 முதியோர்கள்
பாம்பன், ராமேசுவரத்தில் கடலில் குதித்து 2 முதியோர்கள் தற்கொலைக்கு முயன்றார்கள். அவர்களை மீனவர்கள் காப்பாற்றினார்கள்.
ராமேசுவரம்,
பாம்பன், ராமேசுவரத்தில் கடலில் குதித்து 2 முதியோர்கள் தற்கொலைக்கு முயன்றார்கள். அவர்களை மீனவர்கள் காப்பாற்றினார்கள்.
கடலில் குதித்தார்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 63). இவர் நேற்று முன்தினம் மாலை பாம்பன் ரோடு பகுதிக்கு வந்து உள்ளார். திடீரென்று பாம்பன் ரோடு பாலத்தில் இருந்து கடலில் குதித்து உள்ளார்.
அப்போது அந்த பகுதியில் நாட்டுப்படகு ஒன்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கடலில் தத்தளித்து கொண்டிருந்த இவரை மீட்டு கடலோர போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து அவருக்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
மற்றொரு முதியவர்
இதே போல் தேனி மாவட்டம் கே.கே.பட்டியை சேர்ந்த வேலுமணி (70). இவரும் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் தற்கொலை செய்ய முயன்றார். அவரை மீனவர்கள், அங்கிருந்தவர்கள் காப்பாற்றினார்கள். இது பற்றி தகவல் அறிந்ததும் கடலோரப்போலீசார் அங்கு விரைந்து வந்து இவரை சிகிச்சைக்காக ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகின்றார்.