ரேஷன் கடையில் முறைகேடு செய்த ஊழியர்கள் 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை - கோவை கோர்ட்டு உத்தரவு


ரேஷன் கடையில் முறைகேடு செய்த ஊழியர்கள் 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை - கோவை கோர்ட்டு உத்தரவு
x

ரேஷன் கடையில் முறைகேடு செய்த ஊழியர்கள் 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கோவை:

கோவையில் உள்ள குனியமுத்தூர், சீரநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் கடந்த 2011&ம் ஆண்டில் வழங்கல்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் குனியமுத்தூர் ரேஷன் கடையில் ஊழியர் முத்துபீவி ரூ.29 ஆயிரத்து 930-ம், சீரநாயக்கன்பாளையத்தில் ஊழியர் மேரி (வயது 45) ரூ.28 ஆயிரத்து 750-க்கும் போலி பட்டியல் தயாரித்து முறைகேடு செய்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேர் மீதும் பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள 4-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், முத்துபீவி, மேரி ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு பாபு மேத்யூ தீர்ப்பு கூறினார். அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஒரு மாதம் கடுங்காவல் தண்டனையும் விதித்து அவர் உத்தரவிட்டார்.


Next Story