2 போலி டாக்டர்கள் கைது


நாச்சியார்கோவில் பகுதியில் 2 போலி டாக்டர்களை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்:

நாச்சியார்கோவில் பகுதியில் 2 போலி டாக்டர்களை போலீசார் கைது செய்தனர்.

மருத்துவம் பார்ப்பதாக புகார்

கும்பகோணம் அருகே உள்ள முருக்கங்குடி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜீ (வயது 45). இவர் பிளஸ்-2 வரை படித்துள்ளார். இவர் முருக்கங்குடி கடைவீதியில் மருந்து கடை நடத்தி வருகிறார். இவர் மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு ஊசி போடுவதாக புகார் வந்தது.

இதை தொடர்ந்து போலீசார், ராஜீவை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜீவை கைது செய்தனர்.

போலி டாக்டர்கள் கைது

இதேபோல் கண்டிரமாணிக்கம் குச்சிபாளையம் குடியானத்தெருவை சேர்ந்தவர் சரவணன் (48). இவர் பி.எஸ்.சி. படித்துள்ளார். இவர் கூகூர் கடைவீதியில் மருந்து கடை நடத்தி வருகிறார். இவர் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து ஊசி போடுவதாக கிடைத்த புகாரின் பேரில் சரவணனை போலீசார் கைது செய்தனர்.

நாச்சியார் கோவில் பகுதியில் 2 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டிருப்பது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story