பிளஸ்-1 தேர்வில் தோல்வியடைந்ததால் 2 மாணவிகள் தூக்குப்போட்டு தற்கொலை


பிளஸ்-1 தேர்வில் தோல்வியடைந்ததால் 2 மாணவிகள் தூக்குப்போட்டு தற்கொலை
x

பிளஸ்-1 தேர்வில் தோல்வியடைந்ததால் அடுத்தடுத்து 2 மாணவிகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராணிப்பேட்டை

சோளிங்கர்

பிளஸ்-1 தேர்வில் தோல்வியடைந்ததால் அடுத்தடுத்து 2 மாணவிகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாணவி

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த புலிவலம் காலனியை சேர்ந்தவர் முனுசாமி. ஆட்டோ டிரைவர். இவரது இரண்டாவது மகள் தீபிகா (வயது 16) சோளிங்கர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். தற்போது தேர்வு எழுதிய அவர் முடிவுக்காக காத்திருந்தார்.

இந்த நிலையில் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. அதில் தீபிகா 4 பாட பிரிவுகளில் தேர்ச்சி பெறாமல் தோல்வி அடைந்தார். இதனால் தீபிகா மனமுடைந்து காணப்பட்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

நேற்று காலை முனுசாமி ஆட்டோவை எடுத்துக்கொண்டு சென்று விட்டார். தாயாரும் வெளியே சென்றிருந்தார்.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தீபிகா சேலையால் வீட்டிற்குள் தூக்குப்போட்டுக்கொண்டார்.

அக்கம் பக்கத்தினர் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தபோது சிகிச்சை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே தீபிகா இறந்து விட்டதாக கூறினர்.

மற்றொரு மாணவி

இதேபோல் சோளிங்கரை அடுத்த வெங்கப்பட்டு கீழ்காலனியை சேர்ந்த குட்டிகுமார் மகள் ரீட்டா (17), சோளிங்கர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

நேற்று முன்தினம் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ரீட்டா 2 பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெறவில்லை. இதில் மன வருத்தம் அடைந்த ரீட்டா நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீட்டில் சேலையால் தூக்கு போட்டுக்கொண்டார்.

ஆபத்தான நிலையில் அவர் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார்.இது குறித்துகொண்டபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, சோளிங்கர் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்குப்பதிவு செய்து மேலும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

சோகம்

பிளஸ்-1 தேர்வில் தோல்வி அடைந்ததால் 2 மாணவிகள் அடுத்தடுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story