நத்தக்காடையூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.


நத்தக்காடையூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
x

நத்தக்காடையூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர்

முத்தூர்

நத்தக்காடையூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தரப்பில் கூறப்படுவதாவது:-

விவசாயிகள்

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே பாப்பினி ஊராட்சி உத்தாம்பாளையம், கருக்கன்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் தங்கராஜ். (வயது 60). இவருடைய உறவினர் நத்தக்காடையூர் அருகே உள்ள வெள்ளியங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராசு என்கிற வி.எஸ்.ராமசாமி (61). இருவரும் விவசாயிகள். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு காங்கயத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.

இவர்களுடைய மோட்டார்சைக்கிள் காங்கயம் - நத்தக்காடையூர் சாலை வெங்கமேட்டுபதி பிரிவு அருகில் இரவு 7.15 மணிக்கு வந்து கொண்டிருந்தது.அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று திடீரென்று இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த தங்கராஜ் மற்றும் பின்னால் அமர்ந்து வந்த ராசு என்கிற வி.எஸ்.ராமசாமி ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் சாலையில் கீழே விழுந்தனர்.

2 பேர் பலி

உடனே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்த இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தங்கராஜ் நேற்று அதிகாலை 2 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் தீவிர சிகிச்சை பெற்று வந்த ராசு என்கிற வி.எஸ்.ராமசாமியும் நேற்று காலை உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நத்தக்காடையூர் அருகே வாகனம் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.Next Story