குமரி மீனவர்கள் வலையில் சிக்கிய 500கிலோ எடையுள்ள ராட்சத சுறாமீன்கள்


குமரி மீனவர்கள் வலையில் சிக்கிய 500கிலோ எடையுள்ள ராட்சத சுறாமீன்கள்
x

குமரி மீனவர்கள் வலையில் சிக்கிய 500கிலோ எடையுள்ள 2 ராட்சத சுறாமீன்கள் ரூ.1.10ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்டது.

குமரி,

குமரி அருகே உள்ள சின்ன முட்டம். இங்கு மீன்பிடித் துறைமுகம் உள்ளது. சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதலமாகக் கொண்டு மீன்பிடி தொழிலில் 350 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்கின்றன. கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதியில் இருந்து ஜூன் மாதம் 14-ந் தேதி நள்ளிரவு வரை மீன்பிடி தடைகாலம் காரணமாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

அதனைதொடர்ந்து ஜூன் 15ந் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர். இந்நிலையில் நேற்று சின்னமுட்டம் துறைமுகத்திலிருந்த்து மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். அப்போது மீனவர்கள் வீசிய வலையில் 300 கிலோ எடைகொண்ட ராட்சத சுறாமீன் ஒன்றும், 200 கிலோ எடை கொண்ட சுறா மீன் ஒன்றும் சிக்கியது. உடனே அவர்கள் அவசர அவசரமாக சின்ன முட்டம் துறைமுகத்துக்கு கரைதிரும்பினர்.

அதன் பிறகு அந்த2 ராட்சத சுறா மீனை அவர்கள் படகில் இருந்து ராட்சத கிரேன் மூலம் இறக்கினர். அதன் பிறகு அந்த ராட்சத மீனை மீன் வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். 300 கிலோ எடை கொண்ட சுறா மீன் ரூ.60 ஆயிரத்துக்கும் 200கிலோ எடைகொண்ட சுறாமீன்ரூ.50ஆயிரத்துக்கும் ஏலம் போனது. மீன்பிடி தடைகாலம் முடிந்த பிறகு இப்போதுதான் இவ்வளவு பெரிய ராட்சத சுறாமீன் சிக்கி உள்ளது என்று மீனவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


Next Story