வீடு, பேக்கரி கடையில் புகுந்த 2 நல்லபாம்புகள்


வீடு, பேக்கரி கடையில் புகுந்த 2 நல்லபாம்புகள்
x

நாகையில் வெவ்வேறு இடங்களில் வீடு, பேக்கரி கடையில் புகுந்த 2 நல்லபாம்புகளை தீயணைப்பு படையினர் பிடித்தனர்.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகை காடம்பாடி என்.ஜி.ஓ. குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் மனோகரன் (வயது 60).இவர் அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று இவரது வீட்டிற்குள் நல்லபாம்பு ஒன்று புகுந்தது. இதுகுறித்து மனோகரன் நாகை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், வீட்டுக்குள் பதுக்கியிருந்த 4 அடி நீளமுள்ள நல்லப்பாம்பை லாவகமாக பிடித்தனர். இதேபோல் நேற்றுமுன்தினம் காடம்பாடியில் இயங்கி வரும் பேக்கரி கடைக்குள் புகுந்த 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பை தீயணைப்பு படை வீரர்கள் பிடித்தனர்.


Next Story