கோவிலுக்குள் பக்தர்களை அனுப்பிய 2 காவலர்கள் பணியிடை நீக்கம்


கோவிலுக்குள் பக்தர்களை அனுப்பிய 2 காவலர்கள் பணியிடை நீக்கம்
x

கோவிலுக்குள் பக்தர்களை அனுப்பிய 2 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

திருச்சி

சமயபுரம்:

சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்வதற்காக தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வேலை பார்த்து வரும் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தை சேர்ந்த பாதுகாவலர்கள் பக்தர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு பின்வாசல் வழியாக கோவிலுக்குள் அனுப்புகின்றனர் என்று கோவில் இணை ஆணையர் கல்யாணிக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து அவர் கோவிலைச் சுற்றி பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தார். அப்போது கோவிலின் பின்வாசல் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தனியார் நிறுவனத்தை சேர்ந்த காவலர்கள் மணிவேல் மற்றும் பூசைமணி ஆகியோர் பக்தர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு கோவிலுக்குள் அனுப்பியது தெரியவந்தது. இது குறித்து, அந்த தனியார் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து கோவில் இணை ஆணையர் கல்யாணி உத்தரவிட்டார். மேலும் இதுபோன்று பக்தர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு கோவிலுக்குள் அழைத்துச் செல்லும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.


Next Story