மழையால் 2 வீடுகள் இடிந்தன


மழையால் 2 வீடுகள் இடிந்தன
x

அருப்புக்கோட்டையில் மழையால் 2 வீடுகள் இடிந்து விழுந்தன.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் அருப்புக்கோட்டை அருகே சேதுராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட காசிலிங்காபுரத்தை சேர்ந்த கருப்பன் மகன் சங்கிலி (வயது 45), அதே பகுதியை சேர்ந்த மற்றொரு சங்கிலி (60). இவர்கள் 2 பேரின் வீடுகளின் முன்பகுதி இடிந்து விழுந்தது. அனைவரும் உள் பக்க அறையில் படுத்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story