2 வீடுகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன


2 வீடுகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன
x

நித்திரவிளை அருேக 2 வீடுகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன

கன்னியாகுமரி

கொல்லங்கோடு,

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதில் நித்திரவிளை அருகே பரக்காணி பகுதியில் ஆற்றின் கரையோரம் இருந்த சுனில், வினோத் ஆகியோரது வீடுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. வீட்டில் இருந்தவர்கள் ஏற்கனவே வெளியேறி பாதுகாப்பான பகுதிகளில் தஞ்சம் புகுந்ததால் உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த கிள்ளியூர் தாசில்தார் அனிதாகுமாரி மற்றும் அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கடை அருகே இடக்குடிவிளை தாழ்வான பகுதி என்பதால் உயரமான பகுதிகளில் இருந்து வரக்கூடிய தண்ணீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்காமல் இருக்க மழைநீர் வடிகால் ஓடை பேரூராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டது. அந்த மழைநீர் வடிகால் ஓடையை தனிநபர்கள் ஆக்ரமித்து மதில் சுவர் அமைத்து உள்ளதால், நேற்று வந்த மழை வெள்ளம் வழிந்தோட வழியில்லாமல் விவசாய நிலங்கள் வழியாக குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story