கார் கவிழ்ந்து 2 பேர் காயம்
கார் கவிழ்ந்ததில் 2 பேர் காயம் அடைந்தனர்.
மதுரையில் இருந்து புறப்பட்டு திருச்சி நோக்கி ஒரு கார் வந்தது. அந்த கார் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை அடுத்த கல்லுப்பட்டி என்ற இடத்தில் மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. தற்போது, அந்த பகுதியில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த 2 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire