தனியார் பஸ் மோதி 2 பேர் படுகாயம்
தனியார் பஸ் மோதி 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
தர்மபுரி மாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சதீஷ்(வயது 21), தினேஷ் (21). இவர்கள் 2 பேரும் திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் கும்பகோணத்திலிருந்து குளித்தலை வழியாக திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். குளித்தலை அருகே உள்ள மேலகுறபாளையம் பிரிவு சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அதே சாலையில் எதிரே வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சதீஷ் மற்றும் தினேஷ் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.