சாலை விபத்தில் 2 பேர் பலி
சாலை விபத்தில் 2 பேர் பலியாகினர்
தஞ்சையை அடுத்த நல்லவன்னியன் குடிக்காடு பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 43). கூலி தொழிலாளி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் தஞ்சை-மாரியம்மன் கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சரக்கு வேன் எதிா்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. படுகாயம் அடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது உடலை தஞ்சை தாலுகா போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை கீழவாசல் செய்யது அலிபாட்ஷா சாலையை சேர்ந்தவர் நியாஸ் அகமது (33). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று நியாஸ்அகமது தனது மோட்டார் சைக்கிளில் கீழவாசல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தஞ்சை கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.