2 பெண்கள் திடீர் போராட்டம்


2 பெண்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 27 Jun 2023 1:03 AM IST (Updated: 27 Jun 2023 4:39 PM IST)
t-max-icont-min-icon

வெவ்வேறு கோரிக்கைகளுக்காக 2 பெண்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்

வெவ்வேறு கோரிக்கைகளுக்காக 2 பெண்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்ணா போராட்டம்

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா திருக்கோடிக்காவல் மேல வெள்ளாளர் தெருவை சேர்ந்த 65 வயதான மூதாட்டி சகுந்தலா என்பவர் தஞ்சை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் நேற்று திடீரென அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர், அதிகாரிகளிடம் அளித்த மனுவில், எனது மகன் சாலை விபத்தில் இறந்துவிட்டார்.

நானும், எனது கணவரும் ஒரே மகனை பறிகொடுத்து விட்டு வயதான காலத்தில் யாருடைய ஆதரவு இன்றி வாழ்ந்து வருகிறோம். எனது வீட்டை அபகரிக்கும் நோக்கத்தோடு என் மருமகளும், அவரது பெற்றோர், உறவினர்கள் வந்து எங்களை தாக்கினர். எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதுடன் எங்களது வீட்டை மீட்டு தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டை பறித்து மிரட்டல்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா நல்லமண்புழுதை பகுதியை சேர்ந்த ராணி என்பவர் தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் அளித்த மனுவில், எனது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். நான் தற்போது கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன்.

எனது கணவரின் உறவினர் எனது ரேஷன் கார்டை பறித்து வைத்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். ரேஷன் கார்டு இல்லாததால் தற்போது நான் ரூ.10 கொடுத்து ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி சமைத்து சாப்பிட்டு வருகிறேன். எனவே எனக்கு ரேஷன் கார்டை வாங்கி கொடுத்து உதவ வேண்டும் என கூறப்பட்டிருந்தது.


Next Story