2 வீடுகளில் ரூ.2¾ லட்சம் நகை-பணம் திருட்டு


2 வீடுகளில் ரூ.2¾ லட்சம் நகை-பணம் திருட்டு
x

விழுப்புரம் அருகே 2 வீடுகளில் ரூ.2¾ லட்சம் நகை-பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம்

செஞ்சி,

விழுப்புரம் அருகே அன்னியூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி கவிதா (வயது 38). இவர்கள் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றனர். பின்னர் நேற்று முன்தினம் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 2 கிராம் நகை, ரூ.62 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. இதேபோல் அதே ஊரை சேர்ந்த கார்த்திகேயன் மனைவி ஜோதி லட்சுமி (44) என்பவரின் வீட்டு பூட்டையும் உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 5 பவுன் நகை, ரூ.68 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்றனர். 2 வீடுகளிலும் திருடு போன நகை மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.2¾ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து தனித்தனியாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story