முப்படை வீரர்களுக்கு 2 லட்சம் ராக்கி கயிறுகள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி


முப்படை வீரர்களுக்கு 2 லட்சம் ராக்கி கயிறுகள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி
x

முப்படை வீரர்களுக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் ராக்கி கயிறுகள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூர்

இந்திய முப்படை வீரர்களுக்கு பரணி பார்க் சாரணர் மாவட்ட ஆசிரியர்கள், மாணவர்கள், தேசிய மாணவர் படை மாணவர்களின் சார்பில் நமது அன்பும் நன்றியும் தெரிவிக்கும் விதமாக கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து ராக்கி கயிறுகள் அனுப்பி வைக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அந்தவகையில் 7-ம் ஆண்டாக இந்தாண்டும் கரூர் பரணி பார்க் குழும பரணி கல்வி வளாகத்தில் இருந்து புதுடெல்லி ராணுவ தலைமையகத்திற்கு ராக்கி கயிறு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கரூர் பரணி பார்க் கல்வி குழும தாளாளர் மோகனெரங்கன் தலைமை தாங்கினார். கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

செயலர் பத்மாவதி மோகனரெங்கன், அறங்காவலர் சுபாஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரணி கல்வி குழும முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன் வழிகாட்டுதலின் பேரில் பரணி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து திருக்குறள் எண் 766-ஐ தமிழ், ஆங்கிலம், உருது, சமஸ்கிருதம், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, பஞ்சாபி, மராத்தி, அசாமி, குஜாராத்தி, பெங்காளி, சந்தாளி, கொங்கணி, ஒடியா, நேபாளி, சிந்தி உள்ளிட்ட 18 இந்திய மொழிகளில் மொழி பெயர்த்த திருக்குறள் ராக்கி கயிறுகள் 1 லட்சத்து 60 ஆயிரமும், பிற ராக்கி கயிறுகள் 50 ஆயிரமும் என மொத்தம் 2 லட்சத்து 10 ஆயிரம் ராக்கி கயிறுகள் இந்திய ராணுவ வீரர்களுக்கு அனுப்பப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, பரணி பார்க் முதல்வர் சேகர், பரணி பார்க் சாரணர் மாவட்ட செயலர் பிரியா, பரணி பார்க் தேசிய மாணவர் படை அலுவலர் செல்வராசு, பரணி வித்யாலயா தேசிய மாணவர் படை அலுவலர் மனோஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story