லாரி மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற 2 லாலிபர்கள் பலி
புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய 2 வாலிபர்கள் டிப்பர் லாரி மோதி பரிதாபமாக இறந்தனர்.
கோவை
புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய 2 வாலிபர்கள் டிப்பர் லாரி மோதி பரிதாபமாக இறந்தனர்.
தனியார் நிறுவன ஊழியர்கள்
கேரள மாநிலம் மூணாறு பகுதியை சேர்ந்தவர்கள் சுமன் (வயது 22). முத்துக்குமார் (24). இவர்கள் 2 பேரும் கோவை சின்ன வேடம்பட்டி பகுதியில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியர்களாக வேலை செய்து வந்தனர். அவர்கள் 2 பேரும் நேற்று நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாடினார்கள்.
பின்னர் அவர்கள் அதிகாலை 3 மணி அளவில் கோவை- அவினாசி ரோடு சித்ரா பகுதியில் இருந்து காளப்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.
லாரி மோதியது
அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி திடீரென எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த சுமன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேேய பரிதாபமாக இறந்தார்.
பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய முத்துக்குமாரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
டிரைவர் கைது
இது குறித்து கோவை மாநகர கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி விபத்து ஏற்படுத்திய டிப்பர் லாரி டிரைவர் நவீனை போலீசார் கைது செய்தனர்.