பசு மாட்டில் பால் குடிக்கும் 2 ஆட்டுக்குட்டிகள்
பசு மாட்டில் பால் குடிக்கும் 2 ஆட்டுக்குட்டிகள்
ஈரோடு
தாளவாடி அருகே உள்ள கேர்மாளம் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 51). இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இவரது ஆடு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு 2 குட்டிகளை ஈன்றது.
இந்த 2 குட்டிகளும் அங்குள்ள பசு மாட்டிடம் பால் குடித்து வருகிறது. பசு மாடும் ஆட்டுக்குட்டிகளை தன்னுடைய குட்டிகளை போல் நினைத்து விரட்டாமல் பால் கொடுக்கிறது. இதற்கிடையே அந்த பசு மாடும் ஒரு கன்றுக்குட்டியை ஈன்றுள்ளது. அந்த குட்டிக்கும் பசு மாடே பால் கொடுத்து வருகிறது. ஆட்டுக்குட்டிகள் பசு மாட்டில் பால் குடிப்பதை பலர் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
Related Tags :
Next Story