2 சாராய வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைது


2 சாராய வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைது
x

2 சாராய வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்

பேரணாம்பட்டு

2 சாராய வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

பேரணாம்பட்டு அருகே உள்ள கள்ளிச்சேரி கிராமம் மலையடிவார பகுதியை சேர்ந்தவர் ராஜி என்கிற அரை இட்லி ராஜி (வயது 29). சாராய வியாபாரியான இவர் மீது பேரணாம்பட்டு போலீஸ் நிலையம், மற்றும் மது விலக்கு அமுல் பிரிவு போலீஸ் நிலையம் ஆகியவற்றில் 8 சாராய வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் மீண்டும் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாராய தொழிலில் ஈடு பட்டதால் ராஜி என்ற அரை இட்லி ராஜியை குடியாத்தம் மது விலக்கு அமுல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் கைது செய்து சிறையில் அடைத்தார்.

இதேபோல் அணைக்கட்டு தாலுகா கீழ்கொத்தூர் அருகே உள்ள தந்தையன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமாரை (32) சாராயம் விற்றபோது வேப்பங்குப்பம் போலீசார் கைது செய்தனர். இவர்

ராஜி என்ற அரைஇட்லி ராஜி மற்றும் விஜயகுமார் ஆகியோர் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டதால் அவர்களை போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பரிந்துரையின்பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார். இதையடுத்து அதற்கான ஆணையின் நகலை போலீசார் ஜெயில் அலுவலர்களிடம் வழங்கினர்.


Next Story