மணல் கடத்திய 2 லாரிகள்- பொக்லைன் எந்திரம் பறிமுதல்


மணல் கடத்திய 2 லாரிகள்- பொக்லைன் எந்திரம் பறிமுதல்
x

மணல் கடத்திய 2 லாரிகள்- பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

இலுப்பூர் அருகே உள்ள கீழக்கோத்திராப்பட்டி மல்லிக்குளத்தில் அரசு அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக இலுப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் 2 டிப்பர் லாரிகளில் மணல் கடத்துவதற்காக மணலை ஏற்றிக்கொண்டிருந்தனர். இதனையடுத்து பொக்லைன் எந்திரம் மற்றும் 2 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் இலுப்பூர் பகுதியை சேர்ந்த கருப்பையா, ராஜேந்திரன், நாகராஜ், கோபால் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story