மேலும் 2 பேர் கைது


மேலும் 2 பேர் கைது
x

நாங்குநேரி அருகே வாலிபர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது

திருநெல்வேலி

நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சாமிதுரை (வயது 26). இவர் கடந்த 29-ந்தேதி மஞ்சங்குளம் பஸ் நிறுத்தம் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து நாங்குநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் காளியப்பன் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தார்.

இதற்கிடையே திசையன்விளை அருகே உள்ள நடுநந்தன்குளத்தை சேர்ந்த விக்டர் (23), கோதைசேரியை சேர்ந்த முருகேசன் (23) ஆகிய இருவரும் ராதாபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்த நிலையில் நெல்லை அருகே உள்ள தாராபுரத்தை சேர்ந்த சஞ்ஜிவ்ராஜ் (25), ஸ்ரீராம்குமார் (21) ஆகிய 2 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 11 பேர் கொண்ட கும்பல் சாமிதுரையை திட்டமிட்டு கொலை செய்து தெரிய வந்தது. இந்த கொலை தொடர்பாக மேலும் 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story