சிறுவன் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது
மேட்டூரில் சிறுவன் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேட்டூர்:-
மேட்டூர் கருமலைக்கூடல் பகுதியை சேர்ந்த பொக்கிஷ் (வயது 17) என்ற சிறுவனுக்கும், மற்றொரு சிறுவனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், பொக்கிஷை மற்றொரு சிறுவனும், அவனது நண்பர்களும் சேர்ந்து அடித்து கொலை செய்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பிரபு, கார்த்தி ஆகிய 2 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த கார்த்திக், சதீஷ் ஆகியோரை போலீசார் பிடிக்க முயன்ற போது, மோட்டார் சைக்கிளில் தப்பிக்க முயன்ற அவர்கள் இருவரும் கீழே விழுந்ததில் கை மற்றும் கால்களில் அடிபட்டு கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக இருந்த புதுசாம்பள்ளி பகுதியை சேர்ந்த தினேஷ் (24), கோகுல்ராஜ் (24) ஆகிய 2 பேரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் தனிப்படையினர் நேற்று கைது செய்தனர்.