பெல் ஊழியர் வீட்டில் திருடிய மேலும் 2 பேர் கைது


பெல் ஊழியர் வீட்டில் திருடிய மேலும் 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 July 2023 12:55 AM IST (Updated: 26 July 2023 4:51 PM IST)
t-max-icont-min-icon

பெல் ஊழியர் வீட்டில் திருடிய மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் சீக்கராஜபுரம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் மகேஸ்வரன் (வயது 38), பெல் தொழிற்சாலை ஊழியர். இவர் கடந்த 9-ந் தேதி சென்னையில் உள்ள தனது தங்கையின் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றார். பின்னர் மீண்டும் ஊருக்கு வந்த போது, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவிலிருந்த 8 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது.

இது குறித்து மகேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராணிப்பேட்டை இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

கடந்த 14-ந் தேதி பெல் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சங்கீத்குமார் (28) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான 7 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் அதே திருட்டு வழக்கில் தொடர்புடைய தாமஸ் ஆல்வா எடிசன் (31), பார்த்தசாரதி (25) ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து மேலும் 7 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். இருவரையும் ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்.


Next Story