கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் 2 பேர் கைது


கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் 2 பேர் கைது
x

விக்கரமசிங்கபுரத்தில் கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த நவம்பர் 15-ந்தேதி போலீசார் வாகன சோதனை நடத்தியபோது, மினி லாரியின் அடியில் ரகசிய அறை அமைத்து 100 கிலோ கஞ்சாவை கடத்தியது தெரிய வந்தது. இதுதொடர்பாக ஸ்ரீவைகுண்டம் அருகே ராமானுஜம்புதூரைச் சேர்ந்த தளவாய்மாடனை (வயது 24) கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஸ்ரீவைகுண்டம், கோவில்பத்து தெருவைச் சேர்ந்த பிரவின்குமார் (22), மறுகால்குறிச்சியைச் சேர்ந்த செல்லத்துரை (26) ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.


Next Story