மேலும் 2 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
மேலும் 2 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் தொழில் அதிபர் குமரவேல் கொலை வழக்கில் சென்னை மெட்ரோ பாலிட்டன் கோர்ட்டில் சரணடைந்த விருதுநகர் கச்சேரி ரோட்டை சேர்ந்த அமிர்த ஷங்கர் (வயது 30) என்பவரையும், சென்னை தாம்பரம் முடிச்சூர் ரோட்டை சேர்ந்த அமிர்தராஜ் என்ற சேவு (27) என்பவரையும் தனிப்படை போலீசார் நேற்று விருதுநகர் முதல் மாஜிஸ்திரேட்டு கவிதா முன்பு ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து மாஜிஸ்திரேட்டு கவிதா அவர்கள் 2 பேரையும் வருகிற 11-ந் தேதி மதியம் 3 மணி வரையிலும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story