மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் 2 பேர் கைது


மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 27 Nov 2022 1:15 AM IST (Updated: 27 Nov 2022 1:16 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் பகுதியில் தொடர் கைவரிசை காட்டிய மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் 2 பர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் போலீஸ் வாகன சோதனையில் சிக்கினர்.

சேலம்

ஆத்தூர்:-

ஆத்தூர் பகுதியில் தொடர் கைவரிசை காட்டிய மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் 2 பர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் போலீஸ் வாகன சோதனையில் சிக்கினர்.

மோட்டார் சைக்கிள் திருட்டு

ஆத்தூர் ரூரல் பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள் தொடர்ந்து திருட்டு போயின. இதையடுத்து மோட்டார் சைக்கிளை திருடும் கொள்ளையர்களை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் நேற்று ஆத்தூர் புதுப்பேட்டை உழவர்சந்தை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

2 பேர் கைது

விசாரணையில் ஒருவர் பெயர் ராகித் (வயது 19) என்பதும், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா எல்லன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முகமது ரபிக் என்பவருடைய மகன் என்பதும் தெரிய வந்தது. பின்னால் அமர்ந்து வந்தது 15 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது.

இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்ட போது அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் திருடி வந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மேலும் 7 மோட்டார் சைக்கிள்களை மீட்டனர். ராகித்தை ஆத்தூர் சிறையில் அடைத்தனர். அந்த சிறுவனை அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். ஆத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடி தொடர் கைவரிசை காட்டிய 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story