ஜெயங்கொண்டத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு


ஜெயங்கொண்டத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
x

ஜெயங்கொண்டத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுச்சாவடி கிராமம் ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 42), கூலி தொழிலாளி. இவர் ஜெயங்கொண்டம் வாரச்சந்தை முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சந்தையில் காய்கறி வாங்கி விட்டு வந்தபோது அவரது மோட்டார் சைக்கிளை மர்ம ஆசாமி திருடி சென்றது தெரியவந்தது.

இதேபோல் செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (62) ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சிகிச்சை பெற்று திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதனை மர்ம ஆசாமி திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து செல்வகுமார், செல்வராஜ் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story