ரூ.14 லட்சத்தில் 2 புதிய மின்மாற்றிகள்


ரூ.14 லட்சத்தில் 2 புதிய மின்மாற்றிகள்
x
தினத்தந்தி 29 Aug 2023 12:15 AM IST (Updated: 29 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மடவாமேடு, பழையாறு பகுதிகளில் ரூ.14 லட்சத்தில் 2 புதிய மின்மாற்றிகள்

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் ஊராட்சி மடவாமேடு மற்றும் பழையாறு மீனவ கிராமங்களில் குறைந்த மின்னழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் பயன்படுத்த முடியாமலும் பழுதடைந்தும் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். இதையடுத்து இந்த பகுதிகளில புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தநிலையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மடவாமேடு மற்றும் பழையாறு ஆகிய இரண்டு இடங்களிலும் ரூ. 14 லட்சம் மதிப்பிலான இரண்டு புதிய மின் மாற்றிகள் அமைக்கப்பட்டது. அனைத்து பணிகளும் நிறைவு பெற்ற நிலையில் இரண்டு மின் மாற்றிகளை சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். மேலும் பழையாறு சுனாமி நகரை சேர்ந்த 75 குடும்பங்களின் குடும்ப உறுப்பினர் பெயருக்கு மின் இணைப்பு மாற்றி வழங்குவதற்கான ஆணையை வழங்கினார். இதில் கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், சீர்காழி மின்சார வாரிய செயற்பொறியாளர் உமா மகேஸ்வரி, உதவி செயற்பொறியாளர்கள் விஸ்வநாதன், விஜயபாரதி, மற்றும் மின்வாரிய ஊழியர்கள், மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story