கும்மிடிப்பூண்டி அருகே 50 வயது பெண்ணை கற்பழிக்க முயன்ற வடமாநில தொழிலாளிகள் 2 பேர் கைது


கும்மிடிப்பூண்டி அருகே 50 வயது பெண்ணை கற்பழிக்க முயன்ற வடமாநில தொழிலாளிகள் 2 பேர் கைது
x

கும்மிடிப்பூண்டி அருகே 50 வயது பெண்ணை கற்பழிக்க முயன்ற வடமாநில தொழிலாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஒரு கிராமத்தில் குடும்பத்துடன் 50 வயது மதிக்கத்தக்க பெண் வசித்து வருகிறார்.

இவர், நேற்று முன்தினம் மாலை பாத்தபாளையம் கிராமத்தில் உள்ள கங்கையம்மன் கோவில் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, அவரை பின் தொடர்ந்து சென்ற கஞ்சா போதையில் இருந்த வட மாநில தொழிலாளர்கள் 3 பேர் குண்டு கட்டாக அவரை அருகில் உள்ள தைல மரத்தோப்புக்குள் தூக்கிச் சென்று கூட்டாக கற்பழிக்க முயன்றதாக கூறப்படுகிறது, அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதை பார்த்ததும் 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்,

இதையடுத்து அந்த பெண் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காட்டியதின் பேரில் சம்பவத்தில் ஈடுபட்டதாக கருதப்படும் ஒடிசாவை சேர்ந்த அணில்குமார் (27), ஜார்கண்டை சேர்ந்த கோல்கா நாயக் (45) ஆகியோரை கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் நேற்று கைது செய்தனர்.

மேலும், தலைமறைவான மற்றொரு வடமாநில நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.


Next Story