வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் பலி


வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் பலி
x
தினத்தந்தி 6 Dec 2022 12:15 AM IST (Updated: 6 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

செட்டிபாளையம் அருகே சாலையில் நடந்து சென்றபோது கார் மோதி வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் பலியானார்கள்.

கோயம்புத்தூர்

செட்டிபாளையம்

செட்டிபாளையம் அருகே சாலையில் நடந்து சென்றபோது கார் மோதி வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் பலியானார்கள்.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வடமாநில தொழிலாளர்கள்

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் நித்தீஸ்குமார் (வயது 24), அவுடேஷ்குமார் (24). இவர்கள் 2 பேரும், கோவையை அடுத்த செட்டிபாளையம் அருகே உள்ள சீராபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தனர். இதற்காக அந்த நிறுவன வளாகத்தில் உள்ள குடியிருப்பில் தங்கி இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் 2 பேரும் தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க மலுமிச்சம்பட்டிக்கு நடந்து சென்றனர். பின்னர் அங்குள்ள கடைகளில் பொருட்களை வாங்கிவிட்டு மீண்டும் குடியிருப்பை நோக்கி நடந்து சென்று கொண்டு இருந்தனர்.

கார் மோதியது

அவர்கள் இரவு 9 மணியளவில் மலுமிச்சம்பட்டி-ஒத்தக்கால்மண்டபம் சாலையில் சென்றபோது, அந்த வழியாக வேகமாக வந்த கார் திடீரென நித்தீஸ்குமார் மற்றும் அவுடேஷ்குமார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்ததுடன், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர்.

உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 2 பேரும், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பரிதாப சாவு

ஆனால் செல்லும் வழியிலேயே நித்தீஸ்குமார், அவுடேஷ்குமார் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த செட்டிபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விபத்தை ஏற்படுத்திவிட்டு கார் நிற்காமல் சென்றதால், 2 பேர் மீது மோதிய கார் எது என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் விபத்து நடந்த சாலையில் இருக்கும் கடைகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அந்த கார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறத


Next Story