2 ஆம்னி பஸ்கள் மோதல்; 7 ஆசிரியைகள் காயம்


2 ஆம்னி பஸ்கள் மோதல்; 7 ஆசிரியைகள் காயம்
x
தினத்தந்தி 11 May 2023 12:15 AM IST (Updated: 11 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் 2 ஆம்னி பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் 7 ஆசிரியைகள் காயமடைந்தனர்.

விழுப்புரம்

விக்கிரவாண்டி:

சென்னையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு மதுரைக்கு ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த ஆம்னி பஸ், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் நேற்று அதிகாலையில் சுங்க கட்டணம் செலுத்துவதற்காக நிறுத்தப்பட்டது. அப்போது பின்னால் அதிவேகமாக வந்த மற்றொரு ஆம்னி பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் நின்றிருந்த ஆம்னி பஸ்சின் பின்பக்கம் மோதியது.

இந்த விபத்தில் நின்றிருந்த ஆம்னி பஸ்சில் பயணம் செய்த மதுரையை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியைகளான அமுதா(57), கோமதி(53), விஜயலட்சுமி(48), பிரபா(37), உமா மகேஸ்வரி(43), ஊர்மிளா குமாரி(45), துர்கா(35), பஸ் டிரைவரான ஈரோட்டை சேர்ந்த சுரேஷ்குமார்(42), தாம்பரத்தை சேர்ந்த பிரபு(21) ஆகிய 9 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

காயமடைந்த மதுரையை சேர்ந்த 7 ஆசிரியைகளும் சென்னையில் நடந்த ஒரு பயிற்சியில் பங்கேற்று விட்டு ஆம்னி பஸ்சில் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விபத்து தொடர்பாக விக்கிரவாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story