மின்சாரம் தாக்கி 2 மயில்கள் உயிரிழப்பு


மின்சாரம் தாக்கி 2 மயில்கள் உயிரிழப்பு
x
தினத்தந்தி 2 May 2023 6:45 PM GMT (Updated: 2 May 2023 6:45 PM GMT)

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மின்சாரம் தாக்கி 2 மயில்கள் உயிரிழப்பு

கோயம்புத்தூர்

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் ஏராளமான மயில்கள் உள்ளன. அவை அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது உண்டு. இந்த நிலையில் கோவை ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க் பகுதிக்கு 2 மயில்கள் சுற்றி வந்தன.

அவை திடீரென்று உயர பறந்து சென்ற போது மின்சார டிரான்ஸ்பார்மர் மீது எதிர் பாராதவிதமாக மோதியது. இதில் அந்த 2 மயில்களும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.

இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து உயிரிழந்த 2 மயில்களின் உடல்களை அங்கிருந்து எடுத்து சென்றனர்.

கோவை மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி மயில்கள் உயிரிழப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


Next Story