வாலிபரை கத்தியால் வெட்டிய 2 பேர் கைது


வாலிபரை கத்தியால் வெட்டிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 24 Sept 2023 5:00 AM IST (Updated: 24 Sept 2023 5:00 AM IST)
t-max-icont-min-icon

முன்விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

போடி துரைராஜபுரம் காலனியை சேர்ந்தவர் மாயி (வயது 20). போடி வினோபாஜி காலனி 2-வது தெருவை சேர்ந்தவர் அர்ஜூனன் (21). இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் நேற்று மாயி அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அர்ஜூனன், அதே பகுதியை சேர்ந்த முனீஸ்குமார் (25) உள்பட 3 பேர் அங்கு வந்தனர். அவர்கள் மாயியிடம் தகராறு செய்தனர். இதில் இரு தரப்பினரும் மோதி கொண்டனர். இந்த மோதலின்போது அர்ஜூனன் திடீரென தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாயி தலையில் வெட்டினார்.

இதையடுத்து 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர் படுகாயமடைந்த மாயியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இதிரிஸ்கான் வழக்குப்பதிந்து அர்ஜூனன், முனீஸ்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனார். தப்பி ஓடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story