மணல் அள்ளிய 2 பேர் கைது


மணல் அள்ளிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 17 May 2023 12:15 AM IST (Updated: 17 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மணல் அள்ளிய 2 பேர் கைது

ராமநாதபுரம்

தொண்டி

திருவாடானை தாலுகா திருவெற்றியூர் பகுதியில் தொண்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவெற்றியூர் அருகே உள்ள புதுப்பையூர் கிராமத்தில் ஒரு சரக்கு வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனையிட்டுள்ளனர். அதில் ஆற்று மணல் இருப்பது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஆற்று மணல் மற்றும் சரக்குவாகனத்தை கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக சின்னத்தொண்டி கதிரவன் (வயது 20), நரிக்குடி ஆனந்த் இருவரையும் கைது செய்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் பாண்டியம்மாள் அளித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியன் முகிழ்தகம் கிராமத்தைச் சேர்ந்த தாமஸ்(27), பெருமானேந்தல் கிராமத்தைச் சேர்ந்த முகேஷ்(21) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.


Related Tags :
Next Story